Editorial / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் தமிழ் மக்களின் குரலாகச் செயற்படவில்லையென, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் குற்றஞ்சாட்டினார்.
மன்னாரில், இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கடந்த சில நாள்களாக, இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை காரணமாக, எந்த கட்சி, யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பநிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தீர்மானிக்கும் சக்தியாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அண்மைக் காலமாக, பல சந்தர்பங்களில், தமிழ் மக்களின் குரலாக ஒழிக்காத சந்தர்ப்பங்கள் காணப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையை, கூட்டமைப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுப் பெற்றுத் தருவதாக, எந்த அரசாங்கம் உறுதியளிக்கிறதோ, அதேபோல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை எந்த அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கிறதோ, அவர்களுக்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, அவர் மேலும் கூறினார்.
3 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 hours ago
02 May 2026