2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கூட்டாக சேர்ந்து நடவடிக்கை எடுப்போம்’

Niroshini   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இயற்கை வள அழிப்பு தொடர்பில் கூட்டாக சேர்ந்து நடவடிக்கை எடுப்போமென்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயக்காந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக் உட்பட்ட மருதமடு குளத்தின் கீழ், வனவளத் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில், மணல் அகழ்வால் இயற்கை வளம் அழிவடைந்து செல்கின்றமை தொடர்பில், இன்று (24), அப்பகுதிக்கு சென்று ஆராயந்த பின்னர், மக்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிலைபேறான அபிவிருத்திக்காக இந்த வனப் பகுதியை காப்பாற்றப்பட வேண்டியதேவை உள்தென்றார்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த வளத்தை அனுபவிக்காது, பிறபகுதியை சேர்ந்தவர்கள் வளத்தை சுறண்டி, வன அழிகளையும் ஏற்படுத்தியுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், இதற்கு கூட்டாக எல்லோரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார்.

இது பற்றிய முறையான அறிக்கையை வனவளப் பிரிவுக்கும் மாவட்டச் செயலாளருக்கும் அறிவித்து இனிவரும் காலத்தில் இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும், ஜெயக்காந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .