Editorial / 2018 நவம்பர் 12 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னார் கடற்கரையில், சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினரால் நேற்று முன்தினம் (11) மாலை மீட்கப்பட்டுள்ளன.
தலைமன்னார் கடற்கரை பகுதியில், கடற்படை அதிகாரிகள் சிலர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே, கரைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாமென, கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026