Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியில், காணிப் பிரச்சினை காரணமான கைகலப்பில் ஈடுபட்ட கிராமசேவகர் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், வழக்கு விசாரணைகளை, நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
வள்ளிபுனம் பகுதியில், வௌ்ளிக்கிழமை (16) குடும்ப பெண் ஒருவருக்கும் கிராம சேவகருக்கும் இடையில் காணிப் பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இதில் காயமடைந்த கிராமசேவகர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண் கிராம சேவகரால் தாக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் நேற்று முன்தினம் (17) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago