2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கௌதாரிமுனை படுகொலை சம்பவம்: நால்வருக்கும் விளக்கமறியல்

Niroshini   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனையில், இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும், எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், அன்றைய தினம் (10),அடையாள அணிவகுப்புக்கு, அவர்களை உட்படுத்துமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேக நபர்களை, இன்றைய தினம் (28), கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்று பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, பதில் நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .