2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கோட்டைக்கட்டிய குளத்துக்கு தடுப்பணை அவசியம்

George   / 2017 மே 09 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“முல்லைத்தீவு, துணுக்காய், கோட்டைக்கட்டியகுளம் வான் பாய்கின்ற போது, வயல் நிலங்களுக்குள் பாய்வதன் காரணமாக, பெரும் போகத்தில் நெற்செய்கை  அழிவடைந்து வருகின்றது. இதனைத் தடுக்க, மண் அணை அமைக்க வேண்டும்” என அம்பலப்பெருமாள்குளம் விவசாயிகள் துணுக்காய் பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “ஆண்டுதோறும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதன் காரணமாக, 25  ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில்  நெற்செய்கை அழிவடைகின்றது. கோட்டைக்கட்டியகுளத்தின் வான் வெள்ளத்தை, வயல் நிலங்களுக்குள் பாய்ந்து செல்லாமல் செல்வதற்கான மண் அணை உருவாக்கப்பட வேண்டும்.

குறித்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க இக்காலப்பகுதியே உகந்தது. அத்துடன் கோட்டைக்கட்டிய குளத்துக்கும் அம்பலப்பெருமாள் குளத்துக்கும் இடையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்” என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .