2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாபய கடற்படை முகாமுக்குள் 500 கடற்படையினர் சென்றனர்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்,சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர், கோத்தாபாய கடற்படைமுகாமுக்கு இன்று சனிக்கிழமை (10) சென்றுள்ளனர்.

காலை 10 மணியளவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணி அணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர்.

குறித்த கடற்படையினருக்குச் சிறப்புக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதற்காகவும் கோட்டாபய கடற்படைமுகாமுக்குச் சென்றுள்ளதாகக் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .