2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குடும்பஸ்தர் பலி:நால்வர் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - உதயநகர் கிழக்கில் கடந்த 22ஆம் திகதி ஐந்து பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பஸ்தர், யாழ். போதான வைத்தியசாலை சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(30) உயிரிழந்துள்ளார்.

உதயநகர் கிழக்கைச் சேர்ந்த அருணாசலம் கதிரமலை (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை(30) பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மேலுமொருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாக்குதலுக்குள்ளானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .