2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காணி சுவீகரிப்புக்கு முயற்சி

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, ஜெயபுரம் கிராம மக்களுக்கான வயல் நிலத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள 526 ஏக்கரில், சுமார் 30 ஏக்கர் காணியை தனிநபர் ஒருவர் அடாத்தாக துப்பரவு செய்து வருகின்றார் என ஜெயபுரம் வடக்கு மற்றும் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

1983ஆம் ஆண்டில், தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென உருவாக்கப்பட்ட ஜெயபுரம் குடியேற்றத்திட்ட மக்களுக்கு, தேவன்குளத்தின் கீழ் 526 ஏக்கர் வயல் நிலம் ஒதுக்கப்பட்டது. மீள்குடியேற்றத்தின் பின்னர், தேவன்குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் மட்டும் மிதிவெடிகள் அகற்றப்பட்டன. வயல் நிலங்களில் மிதிவெடிகள் உள்ளதென தெரிவித்து மக்களுக்குரிய வயல் நிலம் பகிர்ந்தளிக்கப்படாமல் , இதுவரை காலமும் இருந்தது.

இந்நிலையில், 526 ஏக்கரில் மிதிவெடிகள் உள்ளதென கூறப்பட்ட பகுதியில், யாருடைய அனுமதியில்லாமலும் சுமார் 30 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் துப்பரவு செய்து வருகின்றார். வயல் காணியில் அதுவும் மிதிவெடிகள் நிறைந்த பகுதியில் தனிநபர் ஒருவர் எவ்வாறு அடாத்தாக துப்பரவு செய்ய முடியுமென ஜெயபுரம் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஜெயபுரம் கிராமமக்கள் வயல் நிலத்தினைப் பகிர்;ந்து தாருங்கள் என குரல் எழுப்புகின்ற போதெல்லாம் மிதிவெடிகள் உள்ளதென சாட்டுப்போக்குக் கூறும் அதிகாரிகள் தனிநபர் ஒருவர் அடாத்ததாக வயல் காணியினைப் பிடிக்கின்றபோது எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்? ஜெயபுரம் கிராமமக்களுக்கு 526 ஏக்கர் காணியினை வேகமாகப் பகிர்ந்தளிக்க அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .