2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிராம அமைப்புக்களுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

George   / 2016 ஜூலை 30 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிராம அபிவிருத்தி அமைச்சினால், கிராம மட்ட அமைப்புகளுக்கு தளபாடங்கள், மற்றும் பாத்திரங்கள் என்பன வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி A 9 வீதியில் உள்ள மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் ப.டெனிஸ்வரன் கலந்து கொண்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில தெரிவு செய்யப்பட்ட கிராம/ கிராம மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாடங்க் மற்றும் பாத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர், கிராம மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .