Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை அப்பகுதியில் கிறவல் மண் அகழ்வுக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளார்.
குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்படும் இடத்துக்கு நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விஜயம் செய்திருந்தார்.
இதன்போது நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் குறித்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, குறித்த கிராம மக்கள் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கிறவல் மண் அகழ்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் கிறவல் மண் அகழ்வுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை கிறவல் மண் அகழ்வதற்கான தடையினை மன்னார் நீதவான் நீடித்தார்.
குஞ்சுக்குளம் கிராம மக்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக கிறவல் மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்து குறித்த கிராம மக்கள், கடந்த 26 ஆம் திகதி கிறவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மடு பொலிஸார் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையினை கருத்தில் கொண்டு மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பகுதியில் தற்காலிகமாக கிறவல் மண் அகழ்வை மேற்கொள்ள தடை விதித்ததோடு, தொடர்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையிலே, மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை கிறவல் மண் அகழ்வு செய்யும் இடத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இந்த நிலையிலே குறித்த பகுதியில் கிறவல் மண் அகழ்வதற்கு நீடிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 17ஆம் திகதி வரை மன்னார் நீதவான் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
45 minute ago