2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

காலபோகத்துக்கு முன்னர் குளம் தயாராகும்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் கீழ் எதிர்வரும் காலபோக மற்றும் சிறுபோக நெற் செய்கைகளை மேற்கொள்ளக்;கூடிய விதத்தில் குளத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படும் எனப் பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, இரணைமடுககுளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு தாமதங்கள் தடைகள் காணப்படுகின்றன.

அண்மையில் அணைக்கட்டு புனரமைப்பு பணிகளுக்குத் தேவையான மண் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இதன் புனரமைப்பு பணிகளில் தாமதங்கள் ஏற்பட்டன. இதனால் விவசாயிகள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஆனால், இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் எவரும் அச்சப்படத்தேவையில்லை. 2016 - 2017 காலபோக செய்கை மற்றும் சிறுபோக செய்கைகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. இதில் விவசாயிகள் எவரும் அச்சப்படத்தேவையில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .