2025 ஜூலை 02, புதன்கிழமை

கொள்கலன்களால் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் கவலை

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா குட்செட் வீதியில் நிறுத்தி வைக்கப்படும் எண்ணெய்  கொள்கலன் தாங்கிய வகனங்களின் காரணமாக, குறித்த வீதி வழியான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள குட்செட் வீதியானது, அதிக மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றனர்.

இவ்வீதியில் அமைந்துள்ள, தனியார் ஒருவருக்குச் சொந்தமான எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்துக்கு வருகின்ற எண்ணெய் கொள்கலன்கள் பல, அவ்வீதியில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் தரித்து நிற்பதால் அவ்வீதியூடனான போக்குவரத்து பாதிப்படைந்து சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் போக்குவரத்து செய்யும் நேரங்களில் இக் கொள்கலன்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பல தடவை தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .