2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து, இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர். சுமார் பத்து ஏக்கர் காணியே இராணுவத்தினரால் நேற்றுப் பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு  இராணுவத்தினர், இந்த துயிலும் இல்லத்தில் இரவோடு இரவாக, இரண்டு அடுக்கு வேலிகள் அமைத்து, முகாம்  அமைத்திருந்தனர்.

இந்த நிலையில், மாவீரர் துயிலும் இல்லக் கல்லறைகளுக்கு மேல் கழிப்பறைகளும் சமையலறைகளும் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.

கடந்த வாரம் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலைகொண்டிருந்த படையினர், நேற்று முன்தினம் முதல், படிப்படியாக வெளியேறியுள்ளனர். எருக்கன் பற்றைகளால் சூழ்ந்து காணப்படும் மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறைகள் உடைக்கப்பட்டு, பொதுமக்களின் காணிகள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லக் காணியிலும் கொட்டப்பட்டுள்ளன.

எனவே, விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லக் காணியை அமைதியான முறையில் பேணுவதற்கும், அங்கு முதற்கட்டமாக மரங்கள் நாட்டப்பட்டு பசுமைப் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கும்  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .