2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி பொதுச்சந்தை கடைத்தொகுதி திறப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுச்சந்தையில்; புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்; நேற்று வியாழக்கிழழைம திறந்து வைத்தார்.

வடமாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 11.03 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இக்கடைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது. இக்கடைத் தொகுதியில், 45 கடைகள் உள்ளன.
கடந்த செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இரவு, கிளிநொச்சிப் பொதுச்சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 110 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகின.

இதனையடுத்து நிலமைகளைப் பார்வையிட்ட வடமாகாண முதலமைச்சர் உடனடியாகவே வர்த்தகர்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் பணத்;;தொகையை வழங்கி வைத்ததுடன் மிக விரைவாக வர்த்தக நிலையங்களை அமைத்துத்தருவதாக உறுதியளித்;து வர்த்தக நிலையங்களுக்கான அடிக்கல்லையும்; நாட்டி வைத்தார்.

இதன் அடிப்படையில் கரைச்சிப்பிரதேச சபையினால் துரித கதியில் அமைக்கப்பட்ட குறித்த வர்த்தக நிலையங்கள், செவ்வாய்கிழமை (08) மாலை திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்,  கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம்;, மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளுராட்சித்;திணைக்கள அதிகாரிகள் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .