Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி விவசாயிகளின் நலன்கருதி, உணவுக் களஞ்சியசாலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறியதாவது,
'கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக காணப்படுகின்ற போதும் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தக்கூடிய வசதிகள் போதியளவு இல்லாமையால் கடந்த காலங்களில் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது யூ.என் கபிரெட் போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக பிரதேச ரீதியாக களஞ்சியங்கள் அமைக்கப்;பட்டு வருகின்றன.
யாழ்ப்பாண நாவற்குழியில் உள்ள உணவுக்களஞ்சியம் போன்ற பாரிய உணவுக்களஞ்சியம் ஒன்;றை கிளிநொச்சியில் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான காணி அடையாளப்படுத்தப்பட்டு ஆரம்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago