2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் உதவி விவசாயிப் பணிப்பாளர்களுக்கு வெற்றிடம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 15 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் உதவி விவசாயப் பணிப்பாளர்கள் இருவருக்கான பற்றாக்குறை நிலவுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா புதன்கிழமை (15) தெரிவித்தார்.

இதன் காரணமாக, விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. உடனடியாக ஒருவரையாவது நியமித்தால் வேலைத்திட்டங்களை இலகுவாக முன்னெடுக்க முடியும்.

உதவி விவசாயப் பணிப்பாளர்களை கிளிநொச்சி மாவட்டத்துக்கு நியமிப்பது தொடர்பாக, கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .