Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து இவ்வருடம் ஒக்ரோபர் மாதம் 30ஆம் திகதி வரையில் 41 ஆயிரத்து 862 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 38 ஆயிரத்து 441 பேர் மீளக்குடியேறியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
யுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 42 ஆயிரத்து 736 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 68 ஆயிரத்து 646 பேர் இடம்பெயர்ந்தனர்.
வெடிபொருட்கள் காணப்படுகின்றமையால், முகமாலைப் பகுதியில் 257 குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமாகின்றது.
மேலும், இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் காரணமாகவும் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவில்லையென இக்கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகமும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago