2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் திருடிய புத்தளப் பெண்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சிப் பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.

பஸ்ஸில் பயணிக்கும் பயணியொருவரிடம் இவர்கள் திருட்டில் ஈடுபட்டபோது, கிளிநொச்சி பொலிஸார் இருவரையும் திங்கட்கிழமை (05) கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் நல்லூர் திருவிழாக் காலத்தில் யாழ்ப்;பாணத்தில் தங்கியிருந்தமையும் விசாரணையில் தெரியவந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .