Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2016 ஜூலை 23 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் . என் . நிபோஜன்
கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச்சேர்ந்த தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த 20-07-2016 அன்று இரவு எட்டு மணியளவில் முழங்காவில் விஜி வீதியைச்சேர் செல்லத்துரை துரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கௌதமன் வயது 23 என்வருமே தாக்கப்பட்டு முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பெற்று வருகின்றனர்
குறித்த இராணுவச் சிப்பாய் தமிழ் இளைஞன் எனவும் அண்மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்டவர். தற்போது விடுமுறையில் வீடு சென்ற போதே அயல் வீட்டாரான மேற்படி தந்தையையும், மகனையும் கடந்த கால கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யாரு என்று தெரியுமோ என்ற கடும் தொணியில் கேள்வி எழுப்பியவாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டு கிசிசைப்பெற்று வருகின்றவர்கள் குறிப்பிடுகின்றனர்
சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவச் சிப்பாயை சந்தேகத்தின் பேரில் கைது செய்த முழங்காவில் பொலிஸார் அவரை விடுதலைச் செய்துள்ளனர்.
தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் சிகிசைப்பெற்றுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago