2025 ஜூலை 02, புதன்கிழமை

கிளிநொச்சியில் பெரும்போகத்துக்கு தயார்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

தற்போது மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளமையால் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் காலபோக நெற்செய்கைக்காக தயாராகி வருகி;ன்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 59 ஆயிரம் ஏக்கர் தொடக்கம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போகத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் தற்போது, பெய்துள்ள மழையைப் பயன்படுத்தி நிலத்தை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வயலை உழுதல், இயற்கைப் பசளை புதைத்தல் ஆகிய செயற்பாடுகளில்; விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மழையானது பெய்யும் போது, பயிர்ச் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக விவசாயி ஒருவர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பெரும்போகச் செய்கையானது முழுவதும் மழையை நம்பியதாக இல்லாமல், அங்குள்ள இரணைமடு போன்ற நீர்ப்பாசனக் குளங்களை நம்பி மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் எதிர்பார்;க்கும் அறுவடையை பெறக்கூடியதாகவுள்ளதாக அந்த விவசாயி மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .