Princiya Dixci / 2021 மார்ச் 28 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சட்டுக்களுக்கு எதிராக 20 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்திலும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும், குறிப்பிட்ட சில இடங்களில் சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, 20 வரையான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிலிண்டர் பயன்படுத்தி அட்டை பிடித்தல் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பாவித்தல் போன்ற செயற்பாடுகள் பூநகரி, சங்குப்பிட்டி பாலம், நாச்சிக்குடா போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிகளவானோர் அப்பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025