Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் அனுமதிகளுக்கு முரணான கல் அகழ்வுகள் மற்றும் காடழிப்பு என்பன அயல் கிராமங்களை பெரிதும் பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள சின்னச்சாளம்பன் பகுதியில் அனுமதிகளுக்கு முரணான வகையில்; கருங்கல் அகழ்வுகள் இடம்பெற்;று வருகின்றன.
அத்துடன் காடழிப்புக்களும் அதிகளவில் இடம்;பெற்று வருகின்றன. குறிப்பாக மிக ஆழமான குழிகளாக வெட்டப்பட்டு கல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதனால் இதனைச்சூழவுள்;ள கிணறுகளில் தண்ணீர் வற்றிக்காணப்படுவதுடன் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாய நிலை காணப்படுகின்றது.
எனவே இதற்கான அனுமதிகளை வழங்கிய அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பகுதியில் கல் அகழ்வு இடம்பெறும் பகுதியை அண்மித்த கிராமங்களில் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இவற்றை தடைசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
49 minute ago