Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்தியில் நின்று சண்டையிட்ட குழுவொன்றை, நேற்று வியாழக்கிழமை (29) கைது செய்ததாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தார்.
வவுனியாவில் இளைஞர்களின் அடாவடித்தனம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஏ வீதியில் தடிகள், பொல்லுகள் மற்றும் வாள்களுடன் நின்று சண்டையிட்ட இளைஞர் குழுவைச் சேர்ந்த 7 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களுள் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை பொலிஸார் தேடிவருவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வவுனியா கற்குழி பகுதியில் சகோரர்களுக்கிடையில் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, நேற்று (29) மாலை முச்சக்கரவண்டியொன்றில் வாள்களைக் கொண்டு சென்ற சாரதியொருவரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago