Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா நகரசபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்விலிருந்து, மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா வெளியேறிய சம்பவமொன்று, இன்று (25) இடம்பெற்றது.
வவுனியா நகரசபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில், இன்று (25) காலை 9.15 மணியளவில், வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கெளதமன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, அதிதிகளுக்கு உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
இந்நிலையில், மாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா, மேடையில் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்வுக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் பிரதிநிதியொருவர் உரையாற்றுவதற்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த மாகாணசபை உறுப்பினர் தியாகராசா, மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
மண்டபத்தை விட்டு வௌியேறிய மாகாணசபை உறுப்பினரிடம், இது தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் “யார், யாரோவெல்லாம் பேசுகின்றார்கள். மாகாணசபை உறுப்பினர் என்றவகையில் மதிப்பளிக்கத் தெரியாத இடத்தில் இருப்பது சிறப்பல்ல. எனவே, அந்நிகழ்வில் இருந்து வெளியேறி, வவுனியா வடக்குப் பிரதேச சபை நிகழ்வுக்குச் செல்கின்றேன்” எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
17 minute ago
29 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
38 minute ago
54 minute ago