2025 மே 10, சனிக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்என்.நிபோஜன்

இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸிக் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, கிளிநொச்சியில் நேற்று (19) இடம்பெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, இரு தரப்பினர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, வறுமை, அபிவிருத்தி அவசியம், மக்களின் நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் என்பன குறித்து பேசப்பட்டதோடு, கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும்  சந்திரகுமாரால் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, முழுமையாக கண்ணிவெடி அகற்றும் வரைக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சமகால அரசியல் விடயங்கள் குறித்தும்  கலந்துரையாடப்பட்டது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X