2025 ஜூலை 05, சனிக்கிழமை

சனசமூக நிலையங்கள் மூலம் கிராமங்களை வலுப்படுத்துங்கள்

Menaka Mookandi   / 2016 ஜூலை 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமங்களின் சனசமூக நிலையங்களை உருவாக்கி வலுப்படுத்துமாறு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு, கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மனுக்கையளித்துள்ளன.

போர் ஏற்பட்டு இடப்பெயர்வுகள் நலன்புரி வாழ்வு, மீள்குடியேற்றத்தின் பின்னர் சனசமூக நிலையக் கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளன. கிராமங்களில் மக்களிடம் வாசிப்பு ஆர்வத்தினை, குறிப்பாக மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கங்களை ஊக்குவிப்பதில் சனசமூக நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பல கிராமங்களிலே சனசமூக நிலையங்கள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

கிராமங்களிலே சனசமூக நிலையக் கட்டமைப்பினை உருவாக்குவதன் ஊடாக மக்களும் மாணவர்களும் வாசிப்பு ஆர்வம் ஏற்பட்டு தகவல்களை அறிந்துகொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலே பல கிராமங்களுக்கு பத்திரிகைகள் செல்வதில்லை. சனசமூக நிலையக் கட்டமைப்பின் ஊடாக பத்திரிகைகள் கிராமங்களுக்கு செல்வதற்குரிய வாய்ப்புகள் எற்படுவதற்கு மாவட்டச் செயலர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கையளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .