Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் – முருங்கன், அளவக்கை பகுதியைச் சேர்ந்த சந்தியோகு பிள்ளை கொண்சன்ரைன் செலஸ்ரன், அகில இலங்கை சமாதான நீதவனாக, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் இன்று (7) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
தன்னுடைய ஆரம்ப கல்வியை மன்/அளவக்கை அ.த.க.பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மன்/மாவிலங்கேனி றோ.க.த.க.பாடசாலை மற்றும் மன்/நானாட்டான் ம.வி, உயர்தரத்தை மட்/புனிதமிக்கேல் கல்லுரியிலும் தன்னுடைய பாடசாலை கல்வியை நிறைவு செய்தார்.
இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக்கான உயர் டிப்ளொமா பட்டத்தினையும் ஐரோப்பிய கண்ட பல்கலைக் கழகத்தில் சமூக நலன்புரி நிர்வாகத்துக்கான முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொன்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago