Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கியப் போராட்டத்தைத் தோற்கடிக்கின்ற வகையில், பல காக்கை வன்னியர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.
முல்லைத்தீவு - கற்சிலை மடுவில், நேற்று (25) நடைபெற்ற மாவீரன் பண்டாரவன்னியனின் 215ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பண்டார வன்னியன் மன்னனை, அப்போது கொலனித்துவ ஆட்சி புரிந்துகொண்டிருந்த படைகளிடம் சிக்கிக் கொல்லப்படுவதற்கு, காக்கை வன்னியன் என்ற மன்னன், அவரைக் காட்டிக் கொடுத்தமையே காரணமென, வரலாறு கூறுகிறது. அதை ஞாபகப்படுத்தியே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய சாந்தி சிறீஸ்கந்தராசா எம்.பி, "சரி எது, பிழை எது என்று சிந்திக்கின்ற காலத்தின் விளிம்பில் நாங்கள் இருக்கிறோம். எமது மக்கள் மீது எதுவித அக்கறையும் இல்லாமல், என்ன பொறிமுறைகளை வைத்துகொண்டு இந்த அரசியல் சாணக்கியத்தை அவர்கள் குழப்புகின்றார்கள்?" என்று கேள்வியெழுப்பினார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு காலம், விரைவில் வருமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் விடிவுக்காக, சுய சிந்தனையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுமாறு வலியுறுத்திய அவர், காக்கை வன்னியர்களைக் காலால் உதைத்துத் தள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்த இடத்தில் ஒற்றுமையுடன் பயணிக்கின்ற பொழுதுதான், மக்களின் இழப்புகள், வலிகள், வடுக்களுக்கான விடிவைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025