2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘சம்பவ இடத்தில் கத்தோலிக்க குருக்கள் இருக்கவில்லை’

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் - திருக்கேதிஸ்வரம் கோவில் அலங்கார வளைவு சேதமாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், கத்தோலிக்க குருக்கள் யாரும் ஸ்தலத்தில் பிரசன்னமாகி இருக்கவில்லையென, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

திருக்கேதிஸ்வரம் கோவில் அலங்கார வளைவு சேதம் தொடர்பாக, அவர், இன்று (26) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நிரந்தர அலங்கார வளைவு நிர்மாணிக்கும் முகமாகவே, அந்தப் பகுதியில், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு அகற்றப்பட்டதாகவும் இச்சம்பவமானது, ஏற்கெனவே திட்டமிட்டோ அல்லது கத்தோலிக்க குருக்களின் உந்துதலாலோ நடை பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவம் நடந்த வேளையில், ஸ்தலத்தில் கத்தோலிக்க குருக்கள் யாரும் பிரசன்னமாகி இருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்பை பயன்படுத்தி, பல அரசியல்வாதிகள் இச்சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, மக்களைத் தூண்டி வரும் விதத்தில் செயற்படுவதாகவும், அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X