2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சமூக சேவைகள் அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம், வவுனியா - மன்னார் வீதியிலுள்ள உயிலங்குளத்தில், நாளை  சனிக்கிழமை (01) திறந்து வைக்கப்படவுள்ளது.

10 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைக்கவுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், கேட்போர்கூடம், தனியான அலுவலகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில், இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி.நளாயினி இன்பராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .