Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 ஆம் ஆண்டுக்கான மே தினம், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் விரைந்து வழங்கப்படவேண்டும், பல்லினச் சமூகங்களின் இருப்பையும் அந்தஸ்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும்.
அந்நிய சக்திகளுக்கு வளங்களைப் பகிர்ந்து கொடுப்பதையும் அந்நிய சக்திகளிடம் பணிந்து நடப்பதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவில் காண வேணும். இதற்கான கால எல்லை வகுக்கப்படுவது அவசியம்.
மக்களின் காணிகளில் இருக்கும் படையினர் காலதாமதமில்லாமல் வெளியேற வேண்டும். அத்துடன் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவப்பிரசன்னம் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.
பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் அனைவருக்குமான வேலைவாய்ப்புச் சூழலை உண்டாக்க வேண்டும், உழைப்பாளர்களுக்கான அடிப்படை உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.. அந்தக் குடும்பங்களின் நல்வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களுடைய முன்னேற்றத்துக்கும் ஏற்ற சுயபொருளாதாரக் கொள்கை வகுத்துச் செயற்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
42 minute ago
57 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago
9 hours ago