Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், சான்றுப் பொருள்களாகவுள்ள வாகனங்களில் அதிகளவானவை உரிய ஆவணங்கள் இன்றிக் காணப்படுவதுடன், தொடர்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டவையாகக் காணப்படுவதாக, நீதிமன்றத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருள்களாக நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் சிலவற்றை விடுவிப்பத்தில் பிரச்சினைகள் காணப்படுவதாக அறியமுடிகின்றது.
அதாவது, பல தடவைகள் பிடிக்கப்படும் வாகனங்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பாரப்படுத்தப்பட்ட நிலையில், அவை விடுவிக்கப்பட்ட பின்னரும் மீளவும் அதேகுற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்ற சமயங்களில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சான்றுப்பொருள்களாக ஒப்படைக்கப்படுகின்றன.
டிப்பர் வாகனங்கள் ஒரு சில நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்ட பின்னரும், குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றன.
இதனைவிட, போலி ஆவணங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் என்பன இல்லாத நிலையிலும் அதிகளவான வாகனங்கள் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், சான்றுப்பொருள்களாகப் பாரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்குற்றச்செயல்களில் ஈடுபடுதல் மற்றும் உரிய ஆவணங்கள் இன்மை என்பவற்றால் சான்றுப்பொருள்களாக உள்ள வாகனங்களை விடுவிப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக, நீதிமன்ற தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago