Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சிங்கள ஆட்சியாளர்களின் தேர்தல் பிரசாரக் கோசங்களை இனி தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லையெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தரஜா, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்று வந்த மைதிரியும் தங்களை ஏமாற்றி விட்டாரெனவும் சாடினார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை, இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழ் மக்களை ஏமாற்றிவிட முடியுமென்று நினைத்துவிடக்ககூடாதெனவும் தெரிவித்தார்.
அத்தடன், இந்தத் தேர்தல் கால பிரச்சாரங்களில், தமிழர்களின் புரையோடிப்போயுள்ள உரிமைப் பிரச்சினைக்கான தீர்வையும், சுயநிர்ணய உரிமையையும் பெற்றுத்தருவோம் போன்ற கோசங்களை இனி தமிழ் மக்கள் நம்பத் தயாரில்லை என்பதை சிங்கள தேசம் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago