2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘சிறிதரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்’

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தன்னிச்சையாகவும் அதிகாரத்தோடும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் செயற்படுகின்றார்” என வட மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், இன்று (09) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டுவிட்டு இடையில் வந்தவரை கண்டாவளை மகா வித்தியாலயத்தின் அதிபர் வெற்றிடத்துக்கு நியமித்தேன். அதற்காக, விடுதலைப்புலிகளின் கண்டனத்துக்கு உள்ளானேன். 46 வருடங்கள் கல்விச் சேவையில் பணியாற்றியிருக்கிறேன்.

என் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை என்பது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தீர்மானமே. இது தொடர்பில் நான் கட்சித் தலைவரிடம் தெரிவிக்கவுள்ளேன்.

வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா ஊழல் மோசடிகளில் ஈடுபடக்கூடியவர் அல்ல. முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழுவிடம் குருகுலராஜாவுக்கு எதிராக சுமத்தப்பட்ட 8 குற்றங்களும் சிறிதரனால் ஏற்பாடு செய்யப்பட்டதே.

என் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இதுவரை என்னை ஒரு தடவையேனும் அழைத்துப் பேசவில்லை. தன்னிச்சையாக அதிகார தனத்தோடு, சிறிதரன் செயற்படுகின்றார் என தெரிவித்தார்.

இம்மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கரைச்சி கிளையின் கூட்டத்தில், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினத்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு, தமிழரசுக்  கட்சியின்  தலைமையை கோருவது என்ற தீர்மனம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல்களை விசாரித்த விசாரணைக் குழு முன் தோன்றி, குருகுலராஜாவுக்கு எதிராக ஆதாரங்களுடன் சாட்சியமளித்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுப்பட்டார் எனத் தெரிவித்தே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .