2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுபோகச் செய்கைக்கான நீர் திறந்து விடப்பட்டது

Niroshini   / 2021 மே 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், சிறுபோகப் பயிர்ச் செய்கைக்கான நீர், கட்டுக்கரைக் குளத்தின் 11ஆம் கட்டை பிரதான வாய்க்காலின் கதவு ஊடாக நேற்று  (10) திறந்து விடப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில், இம்முறை 2,578 ஏக்கரில் நெற்செய்கையும் 400 ஏக்கரில், மேட்டு நிலப்பயிரச்; செய்கையும் மேற்கொள்வதற்காக 11ஆம், 12ஆம், 13ஆம் கட்டை மற்றும் சின்ன உடைப்பு, பெரிய உடைப்பு, அடைக்கல மோட்டை போன்ற பிரதான வாய்க்கால்களின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டவுள்ளன.

இதேவேளை, விவசாய ஆராய்ச்சி பண்ணைக்கான நீர், முருங்கன் 14ஆம் கட்டை வாய்க்காலில் இருந்து விநியோகிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இதன் முதற்கட்டமாக, சிறுபோக பயிர்ச் செய்கைக்கான நீரை, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் கலந்துகொண்டு, கட்டுக்கரை குளத்தின் 11ஆம் கட்டை பிரதான வாய்க்காலின் கதவை திறந்து வைத்து, விநியோகித்தார்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், கட்டுக்கரை குளத்தில,; தற்போது 7.11 அடி நீர் காணப்படுவதாகவும் அதனால், வான் பாய்ந்து கொண்டிருப்பதாகவும், மாவட்டச் செயலாளர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X