2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறுவனை காணவில்லை

Editorial   / 2017 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் (வயது-14) என்ற சிறுவனை காணவில்லை என, குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், மன்னாரில் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு வகுப்புக்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என, குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதியாக வெள்ளை நீளக்கை சட்டையும், டெனிம் ஜீன்ஸும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் விவரம் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்கும் கண்டால் 077- 6125880 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .