2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறுவன் மரணம்; வைத்தியசாலை வளாகத்தில் குழப்பம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

சுகவீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்ததால், பெற்றோரும் உறவினர்களும் வைத்தியசாலையை முற்றுகையிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவமொன்று, வவுனியாவில், இன்று (10) இடம்பெற்றுள்ளது.

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்‌ஷன் (வயது 7) என்ற சிறுவனுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டநிலையில், இன்று (10) அதிகாலை 3.30 மணிக்கு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நான்கு மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுவனின் மரணத்தையடுத்து, சிறுவனின் தாயும் உறவினர்களும் கிராமத்தவர்களும் வைத்தியசாலையை முற்றுகையிட்டமையால், அப்பகுதியில் சற்றுநேரம் குழப்பமான நிலை ஏற்பட்டது.

‘நண்டு குத்தியது என்றான்’

 “எனது மகனின் காலில் சிறிய பரு ஒன்று காணப்பட்டது. அது எவ்வாறு வந்தது என மகனிடம் கேட்டேன். அதற்கு நண்டு குத்தியது என்று மகன் சொன்னான்” என்று, உயிரிழந்த சிறுவனின் தாய் தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், தனது மகனின் காலில் சிறிய பரு ஒன்று காணப்பட்டதாகவும் அது எவ்வாறு வந்தது என மகனிடம் கேட்ட போது, அதற்கு நண்டு குத்தியது என்று சொன்னதாகவும் கூறினார்.

பின் தான் அவனுக்கு சாப்பாடு கொடுத்தப் பின்னர் மகன் மிகவும் இயலாமல் காணப்பட்டதுடன், அவனது மலம் கறுப்பாக போனதை அவதனிக்க கூடியதாக இருந்ததாகவும், தாய் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் மனகிக் உடல் எங்கும் நீல நிறமாக மாறியதால், தான் பயந்த நிலையில், இன்று காலை 3.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தற்போது, வைத்தியர்கள் தனது மகன் இறந்துவிட்டதாகக் கூறுவதாகவும், தாய் தெரிவித்தார்.

‘பரிசோதனையின் பின்னரே தகவலைத் தெரிவிக்க முடியும்’

சிறுவனின் மரணம் தெடர்பான மேலதிக தகவல்களை, சட்டவைத்திய பரிசோதனையின் பின்னரே தெரிவிக்க முடியுமென, வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடர்ந்துரைத்த வைத்தியசாலை நிர்வாகம், குறித்த சிறுவன் வரும் போது உடல் பூராகவும் நீல நிறமாக காணப்பட்டதாகவும் மிகுந்த ஆபத்தான நிலையிலேயே, சிறுவனை அதிகாலை 3.30 மணிக்கு, வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தது.

குறித்த சிறுவன், வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு மணி நேரத்தின் பின்னர் இறந்துள்ளதாகவும், நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .