Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் – கற்சிலைமடு பகுதியில், ஒரு ஏக்கர் தனியார் காணியிலிருந்த பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தை இடித்துவிட்டு, அவ்விடத்தில் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு, இராணுவத்தின் 64ஆவது படைப்பிரிவினர், மும்முரமராகச் செயற்பட்டு வருகின்றனரென, காணியின் உரிமையாளரான கந்தையா சிவராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விவகாரத்தால், குறித்த பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, தொல்பொருட்களைத் திணைக்களத்தினரிடம் வினவியபோது, இது, தொல்பொருட்களைத் திணைக்களத்துக்குரிய பகுதியென்றும் வேறு எவரையும் அப்பகுதிக்குள் அனுமதிக்க முடியாதென்றும் கூறியது.
இவ்விடயம் தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராசாவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இராணுவத்தினர், புராதனத் திணைக்களத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago