2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

சி.வி வெளியேறினார்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், காணி அற்ற மக்களுக்கு காணி வழங்குவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை எடுக்க முற்பட்டவேளை, இணைத்தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துமோதல்களையடுத்து, இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனும் அவரைத் தொடர்ந்து வட மாகாண சபையின் புதிய அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரனும் அக்கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

முல்லைத்தீவு குழாமுறிப்பு பகுதியில், ஜனாதிபதி செயலணிக் குழுவால் முஸ்லிம் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பில், காணிகளைச் சென்று கடந்த வாரம் பார்வையிட்டது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துயாடப்பட்டபோது, வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து மோதல்கள் கடும் வாக்குவாதமாக மாறியிருந்தன.

இதனையடுத்து, கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திய இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் சி.வி.வி க்கினேஸ்வரன் இடைநடுவில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, வட மாகாண சபையின் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளியேறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .