2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’: பேரணி பயணிக்கிறது

Editorial   / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

‘ஸ்ரீ லங்காவின் சுதந்திர நாள், தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இருந்து கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள்  பாதிக்கப்பட்ட தரப்பினர் அனைவரும்  ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு நகரை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. 

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள்,  வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள்,  சமூக ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .