Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
'தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காக தமது சொந்த வாழ்வை ஈகம் செய்த சுதந்திர வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா?' என, வடக்கு - கிழக்கு வலித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தங்கள் பிள்ளைகளை தாங்கள் நினைவிற்கொள்வதை எவரும் தடுக்கமுடியாதெனவும், அவர் கூறினார்.
கிளிநொச்சி - சோலைவனம் தனியார் விடுதியில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடரந்துரைத்த அவர், தங்கள் வாழ்வுக்காக வீர காவியமான தங்கள் பிள்ளைகளை நவம்பர் 27இல் நினைவிற்கொள்வதை இன அழிப்பு மூலம் லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை காவுகொண்ட கோட்டா அரசாலும் அதன் கூலிப்படையாலும் தடுத்துவிட முடியாதென்றார்.
தங்கள் பிள்ளைகளை தாங்கள் நினைவிற்கொள்ளாமல் வேறு யார் நினைவிற்கொள்வதென வினவிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான அடக்குமுறையை உலகறிய செய்வோமெனவும் கூறினார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு, பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி துயிலும் இல்லங்களில் மீளாத்துயிலில் இருக்கும் தத்தமது உறவுகளுக்கு, விளக்கேற்றி வணக்கம் செலுத்த முன்வர வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago