2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘சுமேரியன் கல்லறையை அழிக்கின்றனர்’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த, அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அங்போபுர சுமேரியன் கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அந்தப் பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

“கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு கிராம மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

“சுமேரியன் கல்லறை 25 ஏக்கர் நிலப்பரப்பாகும். அங்கு தேக்கு மரங்களை வெட்டும் மோசடி வர்த்தகம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

“மேலும், ஆரம்பகால மனிதர்களின் 89 கல்லறைகள் அங்கு பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது” எனவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .