Freelancer / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் வெள்ளிக்கிழமை (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் யாழ்ப்பாணம் - வடமராட்சி புலோலி சாரையாடி பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான சுந்தரமூர்த்தி சத்யன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுவிட்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த குறித்த இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். R
32 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
4 hours ago