2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சூரிய மின்கலத் தொகுதி பொருத்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் சூரிய மின்கலத் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் அதிகளவிலான திறன் வகுப்பறைகளைக் கொண்ட இப்பாடசாலையில், அதிகளவு கணினிகள் இயக்கப்படுவதன் காரணமாக மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 1994ஆம் ஆண்டின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் க.பொ.த.சாதாரண பழைய பாடசாலை மாணவர்களால் ஐந்து இலட்சம் ரூபாய் நிதி செலவில் சூரிய மின்கலத் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் இருந்த ஆரம்பப் பிரிவு 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயமாக உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .