2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

செஞ்சோலை சிறுவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை விமானப் படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, செஞ்சோலை வளாகத்தில் இன்று (14) இடம்பெற்றது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அங்கிருந்த 57 செஞ்சோலை மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயரிழந்ததுடன், ஐந்து பேர் சிகிக்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தனர்.

80க்கும் மேற்பட்ட சிறுவர்கள், மாணவிகள் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அப்போது சிகிச்சை பெற்று இன்றும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (14) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சி வமோகன், வட மாகாண பிரதி அவைத்தலைவர் வ. கமலேஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் க.சிவனேசன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .