2021 மே 08, சனிக்கிழமை

செட்டிகுளத்தில் நபர் மீது துப்பாக்கி சூடு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா - செட்டிகுளம், முசல்குத்தி காட்டுப்பகுதியில், நேற்று (01) இனந்தெரியாதோரால் நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்டன் ஜெறின் (வயது 36) என்பவரே, இவ்வாறு துப்பாக்கி  சூட்டுக்கு இலக்கானவராவார்.

குறித்த நபர்,  நேற்று மாலை 5 மணியளவில், முசல்குத்தி காட்டுப்பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இதில் படுகாயமடைந்த நபர், செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை எனத் தெரிவித்த செட்டிகுளம் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X