2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

செட்டிகுளம் பகுதிகளில் காட்டு யானைத் தொல்லை

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பரமணியம் பாஸ்கரன்

வவுனியா - செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட பல விவசாயக் குடும்பங்கள் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளமையால் அச்சத்துடன் வாழவேண்டிய சூழல் காணப்படுவதாக, அக்குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகத்தான்குளம், முதலியார்குளம், பூசனிப்பிட்டி, கிறிஸ்தவகுளம், கந்தசாமிநகர், உள்ளிட்ட கிராமங்களிலும் ஏனைய அயல் கிராமங்களிலும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறு காட்டுயானைகளின் தொல்லையால், தினமும் தாங்கள் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள், 1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழகத்திலும் இலங்கையில் ஏனைய பகுதிகளிலும் தங்கியிருந்த நிலையில், ஒரு குறித்த சில குறிப்பிட்ட சில குடும்பங்களே தங்களது காணிகளில் குடியிருந்தன.

ஏனைய காணிகள் ஆட்களற்ற காணிகளாகவே காணப்பட்டன.

கடந்த 1990களுக்கு முன்பு விவசாயத்தில் தன்னிறைவு கண்ட இப்பிரதேசத்தில், இன்று விவசாயச் செய்கை எதனையும் மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும், அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .