Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா - செட்டிக்குளம் பிரதேச சபையை மீட்க தமிழ்த்; தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா என்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செட்டிக்குளம் பிரதே சபையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 05, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி - 04, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் - 03, ஐக்கிய தேசிய கட்சி - 02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 01, முஸ்லிம் காங்கிரஸ் -01, பொதுஜன பெரமுன - 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்துள்ளது.
இதன்போது, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய மக்கள் முன்னணி (04 உறுப்பினர்கள்) என்பன நடுநிலை வகித்து, சுதந்திர கட்சி ஆட்சிக்கு வழிசமைத்திருந்தது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நாளை (12) நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன ஒன்று சேர்ந்தால் 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து, வரவு-செலவுத் திட்டத்தை தோல்வி அடையச் செய்வதுடன், ஆட்சியையும் தென்னிலங்கை கட்சியிடம் இருந்து கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
7 hours ago