Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(செ.கீதாஞ்சன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எரிபொருள் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று (11) வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவரையும் எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளார்கள்.
வீட்டில் இருந்த 45 லீற்றர் டீசல், 21 லீற்றர் பெற்றோல் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 50 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட பெருங்குற்றப்பிரிவினரின் நடவடிக்கையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

58 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago